திங்கள், 28 டிசம்பர், 2009

வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் -இது தத்துவம்

வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் -இது தத்துவம்

மேற்கத்தைய சிந்தனையிலே உருவான மிக பிரபலமான இந்த தத்துவம் யாருக்கு மிக பொருத்தமாக உள்ளதோ இல்லையோ! நம் இந்திய நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய நம் விவசாயத்தின் நீண்ட நெடும் பயணத்தின் நிகழ்வுகளை சற்று பின்னோக்கி இருந்து பார்ப்போம் வாருங்கள்.


நம்பிக்கை தந்த 1950கள்

1950களிலே இந்திய மக்கள் தொகை 36 கோடி. அப்போதைய மொத்த உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்கள். முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950ஆம் ஆண்டு தீட்டபட்டது. விவசாயத்திற்கும் வேளாண் பாசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 சதவிதத்திற்கு மேல் விவசாயத்திற்கு ஒதுக்கபட்டது. மிக பெரிய அணைகட்டுகளான பக்ராநங்கல் மற்றும் நாகார்ஜுனாசாகர் போன்றவை கட்டபட்டன.இதனால் மக்களின் நம்பிக்கையோடு உணவு உற்பத்தியும் வளர்ந்தது.

தொடர்ந்து படிக்க வருகை தாருங்கள்....

http://agriinfomedia.ning.com/profiles/blogs/4679593:BlogPost:208

www.agriinfomedia.com


வியாழன், 12 நவம்பர், 2009

வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான்..

வணக்கம் நண்பர்களே......
வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது
வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான்...

ஆனால்.... இந்த வரிகளை உணர்ந்தவர்களாக அத்தனை இளைஞர்களும்
உள்ளனரா? கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகவே உள்ளது... ஏன் இந்த முரண்பாடு...
எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்...
மகிழ்வாய் இருக்கவேண்டிய வயது என இளைஞர்கள் நினைக்க துவங்கி விட்டனர்....
ஒருசிலர் மட்டுமே தங்கள் கடமை இது அல்ல என உணர்ந்து செயல் படுகின்றனர்...
இதற்கு என்ன காரணம்... சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும்... சரியாக
சிந்திக்காத ஒன்றே இதற்கு காரணம் என்று....

இது பற்றி வரும் கடிதங்களில் மேலும் விரிவாக பேசுகிறேன் உங்களிடம்...

இந்த முரண்பாடு குறித்த உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...

இளைய சமுதாயத்தின் எண்ண விளைவுகள் குறித்த என் கருத்தாய்வு முழுமையடைய உதவுங்கள்...

இளைஞர்கள் நல் எண்ணங்களை மேம்படுத்துவோம்... ..

நட்புடன்......
சக்திவேல்

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஆயிரம் எண்ணங்களுடன்......

மழை சாரல் ....இடியுடன் கூடிய மழை.... லேசான மழை...

காற்றுடன் பலத்த மழை......

இப்படி மழை பற்றிய செய்திகள் ....

ஒரே தமிழகம் ஆனால்... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு

மாதிரியான நிகழ்வுகள்.... இப்படி தான்...

ஒவ்வொரு மனித மனத்திலும் ஆயிரம் எண்ணங்கள்...

ஒவ்வொரு எண்ணத்திற்கு பின்னாலும் அதன் உணர்வுகள்

அதில் பிரதிபலிக்கும் என்பதனை எலலோரும் உணர மறக்கிறோம்...

மறப்பது மட்டும் அல்ல மறுக்கவும் செய்கிறோம்.....

நம் எண்ணத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என நினைக்கும் நாம்

மற்றவர்களின் எண்ணங்களை மதிப்பது இல்லையே ஏன்?

ஆயிரம் எண்ணங்களுடன்......

சக்திவேல்......

www.sakthifriend4all.blogspot.com

கடிதம் எழுதிய நாட்கள்.... இன்னும் என் நினைவில் ....

வணக்கம் நண்பர்களே.....

கடிதம் எழுதிய நாட்கள்.... இன்னும் என் நினைவில் ....

நட்புக்களை தேடி.... எத்தனையோ கடிதங்கள் ....

எழுதிய கடிதத்திற்கு வரும் பதில் கடிதம் வருமா? என தபால்காரரை

எதிர் பார்த்து காத்திருந்த காலங்கள்.......

நலமா? என விசாரித்த வரிகளுக்காக வரும் நலம் என்ற பதில்...

இப்படி எத்தனை மகிழ்வான தருணங்கள் கடிதமுறை மூலம்...

காலத்தின் மாற்றங்கள்.... விஞ்ஞான வளர்ச்சி....

கடிதம் எழுதினாலும்.... அதற்கான பதில் தொலைபேசி, செல்பேசி வாயிலாக.......

ஆனால் கடிதத்தில் அவர்களின் பதில் அளித்த மகிழ்வு ஏனோ இந்த

நேரடி தொலைபேசி விசாரிப்பில் இல்லை....

இந்த மின்னஞ்சல் தகவல் பரிமாற்றம்.....

எனக்கு கடிதமுறை விசாரிப்பை மீண்டும் நினைவு படுத்தியது.....

எனவே தான் இந்த கடிதம் எல்லோருக்கும்.....

என்ன?.... அன்று ஒவ்வொருவருக்கும் ஒரு கடிதம்....

அனுப்பிய கடிதம் கிடைக்க ஒருநாள் இடைவெளி.....

ஆனால் இன்று ஒரே கடிதம் பல முகவரி.....

சரி... நட்புக்களே... நான் யார்? எதற்கு இந்த கடிதம் என

நீங்கள் நினைக்கலாம்.......

நான் என்னைப்பத்தி வரும் நாட்களில் .... வரும் கடிதங்களில்

சொல்கிறேன்.....

உலகில் அனைவரும் நட்புக்கள்... என்பது என் எண்ணம் ....

நான் உங்கள் நண்பன் என்ற்தான் இந்த மின்னஞ்சல்....

நான் அனுப்பும் மின்னஞ்சல் இடயூறாக இருந்தால்

தகவல் சொல்லுங்கள்...... சரி நண்பர்களே.....

பல தகவல்களோடு சந்திப்போம் அடுத்த மின்னஞ்சலில்.....

வாருங்கள் ... என் திரந்த குறிப்புரை பக்கத்திற்கு.......

www.sakthifriend4all.blogspot.com


நட்புடன்.....
நான் முட்டாள்.........

புதன், 30 செப்டம்பர், 2009

தினம் தினம் நான் பலரை சந்திக்கும் வாய்ப்பு ..... அதில் எத்தனை பேர் தங்கள் எண்ணங்களை அப்படியே சொல்கின்றனர்.... எண்ணங்கள் எல்லோருக்கும் பொதுவானவை... ஒவ்வொருவருக்கும் ஒரு செயல் அல்லது ஒரு விசயம் பற்றி ஒவ்வொரு வகையான எண்ண்ங்கள் இருக்கும்... ஆனால் ஏன் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த எண்ணங்களை சொல்ல மறுக்கின்றனர்... எங்கே நம் எண்ணம் தவறாக போய்விடுமோ என்ற தவறான எண்ணம்.. தான் அவர்கள் எண்ணங்களை சொல்லவிடாமல் செய்கிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும்...

ஏதோ நல்ல படியா குழப்பத்தை ஏற்படுத்துரத நினைக்க வேண்டாம் நட்புக்களே...
நான் தினம் தினம் பல வித மனிதர்களை அதாவது வயது , தொழில் , படிப்பு , அதிகாரம் என பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திக்கிறேன்.... அதில் எல்லோரும் அவரவர் அறிவிற்கு எட்டிய அளவில் வளமான எண்ணங்களோடு தான் உள்ளனர்... ஆனால் அவரகள் தங்கள் எண்ணங்களை சொல்ல மட்டும் தயங்குகின்றனர்...
ஒருவர் தனது எண்ணத்தை வெளியே சொல்லும் போது தான் அந்த எண்ணம் தொடர்பான தகவல்கள் மேலும் கிடைக்கும்.... அப்பொழுது தான் அவரது எண்ணம் மேலும் வளமடையும்.... ஒன்று சொல்வார்கள் எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் அது போல தான்... உங்கள் எண்ணம் வளமடைந்தால் உங்கள் வாழ்க்கையும் வளமடையும்...
உங்கள் எண்ணங்களை வெளியே சொல்லுங்கள் அப்போது தான் உங்கள் எண்ணம் மேலும் சிற்ப்படையும்....
உங்கள் எண்ணம் உங்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல... எண்ணம் என்பது பொதுவான ஒன்று .....
என்ன டா நீ இன்னும் குழப்புறேனு சொல்லவறிங்க தானே...

சரி விசயத்துக்கு வரேன்.... என் விளம்பர அலுவல் தொடர்பாக நண்பர் ஒருவரை சந்தித்த நிகழ்வு நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை... ஆம் அந்த நபர் தனது இருசக்கர ஊர்தி அதாங்க பைக் ,,,, அதன் எண்ணிட பலகை ல விவசாயி என எழுதியிறுந்தார்... காவல் ப்ரஸ் இப்படி பல வகையில் எழுதியிருப்பதை பார்திருக்கிறோம்.... ஆனால் எந்த ஒரு விவசாயியும் இப்படி எழுதியது இல்லை....
ஒரு சிலர் தான் இப்படி எழுதியிருப்பார்கள் ....
ஆம் அவர் அவருடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதம் தான் இது,,,,,
இப்படி பலவிதங்களில் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்... கனவு காண்பது மட்டும் எண்ணம் இல்லை... அந்த கனவினை நனவாக மாற்ற பயன் படுவது தான் எண்ணம்...
இப்படி எண்ணம் பற்றிய என் எண்ணத்தை நான் சொல்ல காரணம் இன்று நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் பேசிய போது அவர்கள் தங்கள் எண்ணங்களை சொல்வதற்கு தயங்கினார்கள்....
உங்க எண்ணத்தை சொல்லுங்க என கேட்டும் சொல்ல தயங்கினர்... காரணம் கேட்டேன்...இல்ல நான் தப்பா எதாவத சொல்லிட்டா என்ன பண்ண... என்றார்கள்.
முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்... நீங்கள் உங்கள் எண்ணத்தை சொல்கின்றீர்கள்... உங்கள் எண்ணம் உங்களை பொருத்தவரை சரியான ஒன்று.. மற்றவர்களுக்காக நாம் எண்ணத்தை அப்படியே விட்டுவிட கூடாது .... மற்றவர்களிடம் பேசும் போது தான் எது சரி எது தவறு என்ற் விசயம் தெரியும்.. இல்லை என்றால் நீங்கள் சரியென நினைக்கும் எண்ணம் தவறானதாக கூட இருக்கலாம்... பிறரிடம் தங்கள் எண்ணங்களை சொல்லும் போது தான் எண்ணங்கள் சிறப்படையும் என்று சொல்லிவந்தேன்...

ஆம் நான் கூட அப்படி தான் இருந்தேன்.. முன்பெல்லாம் வெளியிடங்களுக்கு சென்று வரும் போது எனது எண்ணங்களை சொல்ல தயக்கமாக தான் இருக்கும்... அப்படி தயக்கத்தால் எந்த ஒரு செயல் குறித்த எண்ணத்தையும் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்... அதெ போல தான் என் மனதில் எது சரியென படுகிறதோ
அதை யாரிடமும் ஆலோசிக்காமல் செய்வேன்... என்னைப் பொருத்தவரை நமக்கு சரினு படுது செய்வோம் ஏன் மற்றவர்களை கேட்க வேண்டும் என நினைப்பேன்... எந்த ஒரு விசயமும் சரியானது அல்ல... அதே போல தவறானதும் இல்லை.... என்பதனை உணர்ந்தேன்....
இனிய நட்புக்களே... உங்கள் எண்ணம் சரியானதாய் உங்களுக்கு தோனலாம்... இருந்தாலும் உங்கள் எண்ணங்களை பற்றி உங்கள் நட்பு வட்டத்தில் நன்கு விவாதியுங்கள்.... பின்பு செயல் படுத்துங்கள்....
சரி நட்புக்களே இன்னும் நிறைய விசயங்கள் அன்றாடம் புது புது தகவல்களோடு... இன்றைய மொக்கை தகவல் போல இல்லாமல் விறு விறு தகவலோடு என் அடுத்த இடுக்கையில் எழுதுகிறேன்... உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்து விட்டு செல்லுங்கள்....