புதன், 30 செப்டம்பர், 2009

தினம் தினம் நான் பலரை சந்திக்கும் வாய்ப்பு ..... அதில் எத்தனை பேர் தங்கள் எண்ணங்களை அப்படியே சொல்கின்றனர்.... எண்ணங்கள் எல்லோருக்கும் பொதுவானவை... ஒவ்வொருவருக்கும் ஒரு செயல் அல்லது ஒரு விசயம் பற்றி ஒவ்வொரு வகையான எண்ண்ங்கள் இருக்கும்... ஆனால் ஏன் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த எண்ணங்களை சொல்ல மறுக்கின்றனர்... எங்கே நம் எண்ணம் தவறாக போய்விடுமோ என்ற தவறான எண்ணம்.. தான் அவர்கள் எண்ணங்களை சொல்லவிடாமல் செய்கிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும்...

ஏதோ நல்ல படியா குழப்பத்தை ஏற்படுத்துரத நினைக்க வேண்டாம் நட்புக்களே...
நான் தினம் தினம் பல வித மனிதர்களை அதாவது வயது , தொழில் , படிப்பு , அதிகாரம் என பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திக்கிறேன்.... அதில் எல்லோரும் அவரவர் அறிவிற்கு எட்டிய அளவில் வளமான எண்ணங்களோடு தான் உள்ளனர்... ஆனால் அவரகள் தங்கள் எண்ணங்களை சொல்ல மட்டும் தயங்குகின்றனர்...
ஒருவர் தனது எண்ணத்தை வெளியே சொல்லும் போது தான் அந்த எண்ணம் தொடர்பான தகவல்கள் மேலும் கிடைக்கும்.... அப்பொழுது தான் அவரது எண்ணம் மேலும் வளமடையும்.... ஒன்று சொல்வார்கள் எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் அது போல தான்... உங்கள் எண்ணம் வளமடைந்தால் உங்கள் வாழ்க்கையும் வளமடையும்...
உங்கள் எண்ணங்களை வெளியே சொல்லுங்கள் அப்போது தான் உங்கள் எண்ணம் மேலும் சிற்ப்படையும்....
உங்கள் எண்ணம் உங்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல... எண்ணம் என்பது பொதுவான ஒன்று .....
என்ன டா நீ இன்னும் குழப்புறேனு சொல்லவறிங்க தானே...

சரி விசயத்துக்கு வரேன்.... என் விளம்பர அலுவல் தொடர்பாக நண்பர் ஒருவரை சந்தித்த நிகழ்வு நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை... ஆம் அந்த நபர் தனது இருசக்கர ஊர்தி அதாங்க பைக் ,,,, அதன் எண்ணிட பலகை ல விவசாயி என எழுதியிறுந்தார்... காவல் ப்ரஸ் இப்படி பல வகையில் எழுதியிருப்பதை பார்திருக்கிறோம்.... ஆனால் எந்த ஒரு விவசாயியும் இப்படி எழுதியது இல்லை....
ஒரு சிலர் தான் இப்படி எழுதியிருப்பார்கள் ....
ஆம் அவர் அவருடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதம் தான் இது,,,,,
இப்படி பலவிதங்களில் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்... கனவு காண்பது மட்டும் எண்ணம் இல்லை... அந்த கனவினை நனவாக மாற்ற பயன் படுவது தான் எண்ணம்...
இப்படி எண்ணம் பற்றிய என் எண்ணத்தை நான் சொல்ல காரணம் இன்று நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் பேசிய போது அவர்கள் தங்கள் எண்ணங்களை சொல்வதற்கு தயங்கினார்கள்....
உங்க எண்ணத்தை சொல்லுங்க என கேட்டும் சொல்ல தயங்கினர்... காரணம் கேட்டேன்...இல்ல நான் தப்பா எதாவத சொல்லிட்டா என்ன பண்ண... என்றார்கள்.
முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்... நீங்கள் உங்கள் எண்ணத்தை சொல்கின்றீர்கள்... உங்கள் எண்ணம் உங்களை பொருத்தவரை சரியான ஒன்று.. மற்றவர்களுக்காக நாம் எண்ணத்தை அப்படியே விட்டுவிட கூடாது .... மற்றவர்களிடம் பேசும் போது தான் எது சரி எது தவறு என்ற் விசயம் தெரியும்.. இல்லை என்றால் நீங்கள் சரியென நினைக்கும் எண்ணம் தவறானதாக கூட இருக்கலாம்... பிறரிடம் தங்கள் எண்ணங்களை சொல்லும் போது தான் எண்ணங்கள் சிறப்படையும் என்று சொல்லிவந்தேன்...

ஆம் நான் கூட அப்படி தான் இருந்தேன்.. முன்பெல்லாம் வெளியிடங்களுக்கு சென்று வரும் போது எனது எண்ணங்களை சொல்ல தயக்கமாக தான் இருக்கும்... அப்படி தயக்கத்தால் எந்த ஒரு செயல் குறித்த எண்ணத்தையும் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்... அதெ போல தான் என் மனதில் எது சரியென படுகிறதோ
அதை யாரிடமும் ஆலோசிக்காமல் செய்வேன்... என்னைப் பொருத்தவரை நமக்கு சரினு படுது செய்வோம் ஏன் மற்றவர்களை கேட்க வேண்டும் என நினைப்பேன்... எந்த ஒரு விசயமும் சரியானது அல்ல... அதே போல தவறானதும் இல்லை.... என்பதனை உணர்ந்தேன்....
இனிய நட்புக்களே... உங்கள் எண்ணம் சரியானதாய் உங்களுக்கு தோனலாம்... இருந்தாலும் உங்கள் எண்ணங்களை பற்றி உங்கள் நட்பு வட்டத்தில் நன்கு விவாதியுங்கள்.... பின்பு செயல் படுத்துங்கள்....
சரி நட்புக்களே இன்னும் நிறைய விசயங்கள் அன்றாடம் புது புது தகவல்களோடு... இன்றைய மொக்கை தகவல் போல இல்லாமல் விறு விறு தகவலோடு என் அடுத்த இடுக்கையில் எழுதுகிறேன்... உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்து விட்டு செல்லுங்கள்....